வந்தே பாரத் மிஷன் : குவைத்திலிருந்து ஏர் இந்தியா மூலம் 171 பயணிகளுடன் சென்னை வந்த இந்தியர்கள்..!!

Vande Bharat Mission ; 171 indians recovered from kuwait.

கொரோனா உலகம் முழுவதும் பரவியுள்ள நிலையில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களை மீட்கும் இந்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் அடிப்படையில் நேற்று (மே 10) 2வது நாளான மதியம் 2 மணி மணியளவில் குவைத்திலிருந்து ஏர் இந்தியா விமானம் 171 தமிழர்களுடன் (167 பெரியவர்கள் மற்றும் 4 குழந்தைகள்) புறப்பட்டு சென்றது என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த மீட்பு திட்டத்தின் அடிப்படையில், மே 9ஆம் தேதி அன்று ஹைதராபாத் மற்றும் கொச்சிக்கு இரண்டு விமானங்களில் இந்தியர்கள் புறப்பட்டு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வரும் நாட்களில் அகமதாபாத் மற்றும் கேரளா கோழிக்கோடு ஆகிய இடங்களுக்கு இரண்டு விமானங்கள் புறப்பட்டு செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.