குவைத்தின் சல்மியாவில் உணவக தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்..!!

Unpaid salaries for 3 months forces restaurant workers to protest. (photo : Kuwait Local)

குவைத்தில் சல்மியா பகுதியில் சுமார் 150-200 உணவக தொழிலாளர்கள் கூட்டம் கூடி போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடனடியாக அந்த பகுதிக்கு பாதுகாப்பு ரோந்து வரவழைக்கப்பட்டனர் மற்றும் ஊரடங்கால் உணவகங்கள் இயங்குவதை நிறுத்தியதால் கடந்த 3 மாதங்களாக தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்கவில்லை என்பது கண்டறியப்பட்டது.

சல்மியாவில் உள்ள உணவக தொழிலாளர்கள் கூட்டத்தில் இருந்து தொழிலாளர்கள் தங்களுக்கு வாழ்வதற்கு போதுமான பணம் இல்லை என்று தெரிவித்தனர்.

சல்மியா காவல் நிலைய காவல்துறையினர் தொழிலாளர்களை தங்கள் வீடுகளில் தங்கும்படி வற்புறுத்தினர்.

மேலும்,சமூக விவகார அமைச்சகத்திற்கும், வெளிநாட்டினர் பணிபுரியும் உணவகத்தின் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08