குவைத்தில் மேலும் இரண்டு பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு..!!

Twenty more coronavirus cases detected in kuwait.

ஈரானில் உள்ள தெஹ்ரான் மற்றும் கோமிலிருந்து விமானத்தில் வந்த இரண்டு பயணிகள் நேற்று விடியற்காலையில் கொரோனா வைரஸால் (covid 19) பாதிக்கப்பட்டுள்ளதாக குவைத் சுகாதார அமைச்சகம் அறிவித்தது. இதுவரை கொரோனா வைரஸால் 5 பேர் பதிக்கப்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் , இவர்களில் ஒருவருக்கு வயது 58 மற்றொருவருக்கு 28 ஆகும்.

சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக தகுதிவாய்ந்த அதிகாரிகள் வழங்கிய அறிவுறுத்தல்களைக் கடைப்பிடிக்குமாறு அனைத்து குடிமக்களுக்கும் சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

இவர்களின் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் வந்த பிறகு இவர்களை கண்காணிப்பதை குறித்து சுகாதார அமைச்சகம் அறிவிக்கும் என்று தகவல்கள் வந்துள்ளது.

source : Arab Times