குவைத்தில் இரண்டு இந்தியர்கள் தூக்கிட்டு தற்கொலை..!!

Two indians commit suicide by hanging in farwaniya and mangaf.

குவைத்தில் ஃபர்வானியா (Farwaniya) மற்றும் மங்காஃப் (Mangaf) பகுதிகளைச் சேர்ந்த இரண்டு இந்தியர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் தற்கொலை சம்பவம் ஃபர்வானியா பகுதியில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது, பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது பாதிக்கப்பட்டவரின் கழுத்தில் செப்பு கம்பியால் பிணைக்கப்பட்டு அவரது இல்லத்தின் படிக்கட்டுகளில் இரும்புக் குழாயில் தொங்கிய நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தற்கொலைக்கான காரணங்களைத் தீர்மானிக்க குற்றவியல் விசாரணை அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது தற்கொலையைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர் கயிற்றால் அவரது கழுத்தில் சுற்றிக் கொண்டு அவர் வசித்து வரும் மான்காஃப் பகுதியில் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவரது உடல் தடயவியல் மருத்துவத்திற்காக அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.