குவைத்தில் ஊரடங்கின் போது வாக்கிங் சென்ற இரண்டு இந்தியர்கள் கைது..!!

Two indians caught by police for breaking curfew in kuwait.

குவைத்தில் பகுதி ஊரடங்கு உத்தரவை மீறிய இரண்டு இந்தியர்களை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தலைநகரின் பாதுகாப்புப் பணியாளர்கள், மாலை வேளையில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது இரண்டு பேர் தெருவில் நடந்து செல்வதைக் கண்டுள்ளனர்.

மேலும், அவர்களிடம் விசாரித்தபோது வாக்கிங் (walking) வந்ததாக தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு படையினர் இருவரையும் அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு அனுப்பியதாக வட்டாரம் தெரிவித்துள்ளது.