குவைத்தில் மேலும் இரண்டு கூட்டுறவு சங்கங்களின் ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிப்பு..!!

Two Cooperative Society employees infected with covid-19. (photo : IIK)

அபு ஃபாத்திரா கூட்டுறவு சங்கத்தின் 100 ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்திய பின்னர், அதன் 8 ஊழியர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியது.

பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர், சுகாதார அமைச்சகத்தின் படி அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், Rehab கூட்டுறவு சங்கம் அதன் ஊழியர்களில் 9 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும், தொடர்பு கொண்டவர்களில் 26 பேர் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.