குவைத்தில் நாளை முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் தொடக்கம்..!!

Third phase of normalcy paln to begin from tomorrow in kuwait. (image credit : Gulf news)

குவைத்தில் COVID-19 நோய்த்தொற்றால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுருந்தது, தற்போது, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கட்டங்களாக தளர்த்தப்பட்டு வருகிறது.

இரண்டாம் கட்டத்தின் தளர்வுகள் முடியவிருக்கும் நிலையில், நாளை (ஜூலை 28) முதல் மூன்றாம் கட்ட தளர்வுகள் தொங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குவைத்தில் தொடர்ந்து முழு ஊரடங்கில் இருந்த ஃபர்வானியா பகுதி நேற்று (ஜூலை 26) முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மூன்றாம் கட்டத்தில், டாக்ஸி சேவை (ஒரு பயத்திற்கு ஒரு நபர் மட்டும்) , உணவகங்கள், ரிஸார்டுகள் , மற்றும் அணைத்து மசூதிகள் போன்றவைக்கு மக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், குவைத்தில் நடைமுறையில் இருக்கும் பகுதி ஊரடங்கு நேரத்தை இரவு 9 மணியிலிருந்து அதிகாலை 3 மணி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms