குவைத் அல் நசீம் பகுதியில் திருடியவர் கைது..!!

Thief arrested one hour before curfew.

ஊரடங்கு உத்தரவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் அல் நசீமில் உள்ள வீட்டிற்குள் நுழைந்த ஒரு திருடனை ஜஹ்ரா போலீசார் கைது செய்துள்ளதாக அல்-அன்பா தினசரி தெரிவித்துள்ளது.

அந்த குடும்பம் வீட்டில் இல்லாததை அறிந்த திருடன் பிராண்டட் கடிகாரங்கள், பைகள், பணப்பைகள் மற்றும் ட்ரோன்கள் போன்றவற்றை திருடியதாகக் கூறப்படுகிறது.

திருடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு 20,000 தினார்கள் ஆகும். முதற்கட்ட விசாரணையின்போது இரண்டு நண்பர்களின் உதவியுடன் இந்த குற்றத்தை செய்ததை திருடன் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த இரு கூட்டாளர்களையும் போலீசார் தற்போது தேடி வருகின்றனர்.

source : Arab Times