உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் ஜப்பான் முதலிடம்; குவைத் நாட்டிற்கு கிடைத்திருக்கும் இடம் எது தெரியுமா?

The Most powerful Passports in the world in 2020

உலகின் அதிக செல்வாக்குடைய பாஸ்போர்ட்டுகளின் பட்டியலை வெளியிடும் அமைப்பு ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ். இந்த அமைப்பு, தற்போது 2020-ம் ஆண்டுக்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், ஜப்பான் நாட்டின் பாஸ்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. இதன்மூலம் 191 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். இரண்டாமிடத்தை சிங்கப்பூர் பாஸ்போர்ட் பிடித்திருக்கிறது. 190 நாடுகளுக்கு விசா இல்லாமல் சென்றுவரும் வாய்ப்பை இது வழங்குகிறது.

ஆசியாவின் இவ்விரு நாடுகளும் முதல் இரண்டு இடங்களை தட்டிச்சென்றுள்ள நிலையில், ஜெர்மனியின் பாஸ்போர்ட் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதன்மூலம், 189 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலிலுள்ள
முதல் 10 நாடுகள் :

  1. ஜப்பான்
  2. சிங்கப்பூர்
  3. தென்கொரிய மற்றும் ஜெர்மனி
  4. பின்லாந்து மற்றும் இத்தாலி
  5. ஸ்பெயின், லக்சம்பர்க், டென்மார்க்.
  6. ஸ்வீடன் மற்றும் பிரான்ஸ்
  7. சுவிட்சர்லாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, அயர்லாந்து, ஆஸ்திரியா‌
  8. அமெரிக்கா, இங்கிலாந்து, நார்வே, கிரீஸ், பெல்ஜியம்
  9. நியூசிலாந்து, மல்டா, கிரீஸ் ரிபப்ளிக், கனடா, ஆஸ்திரேலியா
  10. ஸ்லோவாக்கியா, லித்தானியா மற்றும் ஹங்கேரி.

வளைகுடா நாடுகளை பொறுத்தவரை அமீரகம் 18 இடத்தையும், குவைத் 57 இடத்தையும், கத்தார் 58 வது இடத்தையும், சவுதி 66வது இடத்தையும் பெற்றுள்ளன.

இந்த ‘சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகள்’ பட்டியலில் கடந்த 2019-ம் ஆண்டில், 82-வது இடத்தில் இருந்த இந்தியா, 84-வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.இந்திய பாஸ்போர்ட், 58 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்லும் வாய்ப்பை வழங்குகிறது. இதுபோல் பாகிஸ்தான் மற்றும் சோமாலியா 104 வது இடத்தை பிடித்துள்ளது. இலங்கை 97 வது இடத்தையும் பிடித்துள்ளது.

மோசமான பாஸ்போர்ட்டுகள்’ பட்டியலில், வடகொரியா, சூடான், நேபாளம் , லிபியா, ஏமன், சோமாலியா, பாகிஸ்தான், சிரியா, ஈராக், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இருக்கின்றன.