குவைத் நாட்டிற்கு பிரபல டென்னிஸ் வீரர் ராஃபா நடால் வருகை.!

The famous tennis player Rafa Nadal in Kuwait.

குவைத் நாட்டிற்கு பிரபல டென்னிஸ் வீரர் ராஃபா நடால் (Rafa Nadal) வருகை புரிந்துள்ளார். இவர் குவைத் சர்வதேச டென்னிஸ் மைதானத்தை நாளை (05-02-2020) திறந்து வைப்பதற்காக ராஃபா நடால் குவைத் வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள டென்னிஸ் மைதானமானது 6th Ring சாலையில் உள்ள 360-Mall அருகில் உள்ளது.

இதையடுத்து, நாளை திறப்பு விழா தினத்தில் ஆரோக்கியமான துவக்கவிழா போட்டியாக Rafa Nadal மற்றும் David Ferrer கலந்துகொள்ளும் போட்டி நடைபெறும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.