குவைத்தில் வெப்பநிலை சரிவு..!!

Temperatures to drop between 2°C to 0°C in kuwait.

குவைத்தில் கடுமையான குளிர் நேற்று தொடங்கியது மற்றும் வானிலை வல்லுநர்கள் வெப்பநிலை அதிகளவில் குறையும் என்று எச்சரித்தனர். மேலும், இன்று கடுமையான குளிராக இருக்கும் மற்றும் இது அடுத்த வியாழக்கிழமை வரை தொடரும் என்று எதிபார்க்கப்படுவதாக தெரிவித்தனர்.

அடுத்த சில நாட்களில் வானிலை மிகவும் குளிராக இருக்கும் என்று வானிலை முன்னறிவிப்பு நிபுணர் அப்துல்அஜிஸ் அல்-கராவி கூறியுள்ளார், குறிப்பாக செவ்வாய் மற்றும் புதன்கிழமை மாலை மற்றும் இரவு நேரங்களில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 2 முதல் 0 செல்சியசிற்கு கீழே எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source : Arab Times