குவைத்தில் ஹோட்டல் முன்னாள் வைத்து சிறுமி கடத்தல்..!!

Teenage girl kidnapped in front of a hotel by trio, raped in captivity for one day. (image credit : Arab times)

ஹவல்லி கவர்னரேட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு முன்னால் வைத்து 18 வயது சிறுமியை கடத்தியதாக மூன்று பேர் அரசு வக்கீலிடம் அனுப்பப்பட்டுள்ளதாக அல்-ராய் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த வாக்குமூலத்தின்படி, ஹவல்லியில் உள்ள ஒரு ஹோட்டல் வழியாக அவள் சென்றபோது மூன்று பேரும் அவளை காரில் கட்டாயப்படுத்தி அப்பகுதியில் உள்ள ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர், பிறகு அந்த பெண்ணை கடத்திய இடத்திலேயே அவர்கள் விட்டுள்ளனர்.

இதற்கிடையில் சிறுமி வீடுதிரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் சந்தேக நபர்கள் மற்றும் சம்பவம் நடத்த இடத்தை விசாரித்தபின்னர் குற்றவாளியை கைதுசெய்தனர்.

NEWS : Arab Times