குவைத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக பெண் சந்தேகம்; பரிசோதனையின் முடிவு என்ன ?

Suspected woman in Kuwait tested negative for coronavirus. (image source : Gulf news)

கொரோனா வைரஸ் இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட பெண்ணை சோதித்துப்பார்த்ததில் நெகடிவ் (negative) வந்துள்ளது. இவர் வெளிநாட்டு பயணத்திலிருந்து திரும்பி வந்த போது குவைத் சர்வதேச விமான நிலையத்தில் தெர்மல் ஸ்கேனர்கள் மூலம் காய்ச்சலால் கண்டறியப்பட்டார்.

அவரை சுகாதார அதிகாரிகள் ஒரு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் , பரிசோதித்ததில் கொரோனா வைரஸால் அந்தப் பெண் பாதிக்கப்படவில்லை என்பது உறுதிசெய்யப்பட்டது.

அமைச்சகம் பின்னர் வெளியிட்ட அறிக்கையில், குவைத் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியது. மேலும், வைரஸை குறித்த தகவல்களை அறிந்துகொள்ள அதன் அதிகாரப்பூர்வ சமூக வலைதளபக்கங்களை பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Source : Arab Times