குவைத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான திட்டத்தின் இரண்டாம் கட்டம் குறித்த செய்தி குறிப்பு..!!

Second stage plans: Lifting of isolation from Mahboula and farwaniya. (photo : kwttoday)

குவைத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கான திட்டத்தின் முதல் கட்டம் ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்ட பின்னர், இரண்டாவது கட்டத்திற்கு மாறுவது குறித்து வியாழக்கிழமை அறிவிக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஊரடங்கு உத்தரவு நேரம் :

இரண்டாவது கட்டம் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்கும் என்றும், பகுதி ஊரடங்கு உத்தரவு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு நிறுவனங்கள் மற்றும் அமைச்சகங்கள் 30% தொழிலாளர் தொகுப்பில் தங்கள் பணிகளை மீண்டும் தொடங்கும், பதிவு மூலம் முன் நியமனம் அடிப்படையில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை மால்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், 15 வயதிற்குட்பட்டவர்கள் மால்களில் நுழைவதைத் விட்டு தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட வேண்டும் :

தற்போது தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர வேறு எந்த புதிய பகுதிகளிலும் தனிமைப்படுத்த எந்த நோக்கமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஃபர்வானியா மற்றும் மஹபவ்லா ஆகிய பகுதிகளை தனிமைப்படுத்தலிலுருந்து விளக்கு அளிப்பதற்கு அதிக சாத்தியக்கூறுகள் உள்ளன, அதே நேரத்தில் ஜீப் அல்-ஷுயோக் பகுதியை தொடர்ந்து தனிமைப்படுத்தலில் வைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08