குவைத்தில் முழு ஊரடங்கில் உள்ள Khaitan பகுதியில் இழப்புக்கள் மற்றும் குறைந்த வருவாய்களால் உணவக உரிமையாளர்கள் தவிப்பு..!!

Restaurant owners troubled by losses and low revenues following Khaitan lockdown. (photo : TimesKuwait)

கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியாக khaitan பகுதியில் செயல்படுத்தப்பட்ட முழு ஊரடங்கின் காரணமாக அந்த பகுதியில் உள்ள பல உணவகங்களின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர்கள் தங்கள் உணவகங்களின் நிலைமைகள் குறித்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் என்று அல்-சாயாஸா தினசரி தெரிவித்துள்ளது.

சாதாரண நாட்களுடன் ஒப்பிடும்போது அவர்களின் வருவாய் 90 சதவீதம் வரை குறைந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும், இந்த குறைந்த வருவாய் வைத்து தொழிலாளர்களின் வாடகை மற்றும் சம்பளத்தை வழங்குவதற்கு போதுமானதாக இல்லை என்பதால், அவர்கள் தற்போது மோசமான நிலைமைகளை எதிர்கொள்வதாக தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் உணவகங்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அபுசம் என்ற உணவகத்தின் உரிமையாளர் கூறும்போது, தொழிலாளர்களின் ஊதியம் மற்றும் வாடகை 14,000 தினார் செலுத்த வேண்டும், அதே நேரத்தில் வாடகை குறைக்கக் கூட வேண்டும் என்ற வேண்டுகோளை சொத்து உரிமையாளர் புறக்கணித்துவிட்டதாக தெரிவித்தார்.

மேலும், விற்பனை 10 சதவீதத்தை தாண்டாது என்றும், தனது வாடிக்கையாளர்களையும் அவரது நற்பெயரையும் இழப்பதைத் தவிர்ப்பதற்காக தற்போது உணவகத்தைத் திறந்து வைத்திருப்பதாக அவர் விளக்கினார், ஆனால் வருமானத்தைப் பொறுத்தவரை, இலாபங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

ஊரடங்கு காரணமாக அனைத்து உணவகங்களும் கடினமான நேரங்களையும் இழப்புகளையும் சந்தித்து வருவதாகவும், முழு நாடுகளின் மற்றும் நிறுவனங்களின் பொருளாதாரத்தை அழித்த இந்த தொற்றுநோயை அகற்றுமாறு கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் தெரிவித்தார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08