குவைத்தில் புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்கள் சனிக்கிழமையிலிருந்து (ஜூன் 6) வழங்கப்படும்..!!

Renewed driving licenses will be issued from saturday in kuwait. (photo : Arab times)

குவைத்தில் ஆன்லைன் சேவையின் மூலம் புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை வழங்குவதற்கான மீண்டும தொடங்குவது தொடர்பான அறிவிப்பை உள்துறை அமைச்சகம் இன்று (ஜூன் 4) வியாழக்கிழமை அறிவித்தது.

முக்கியமாக 11/4/2020 தொடங்கி தற்போது வரையில் ஆன்லைன் இணைய சேவை மூலம் புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களை பெறுவதற்காக அல்-நஸ்ர் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் உள்ள விளையாட்டு பிரிவு கட்டிடத்தில் சனிக்கிழமை (06/05/20) நாளை மறுநாள் காலையில் 8 மணி முதல் 5 மணி வரை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரைப் பெற்றுக்கொள்ள அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்க்கான முகவரி Ardhiya, Block 4, Mohammad Bin Al-Qasem street ஆகும்.