அயல்நாட்டிலிருந்து இந்தியா வரும் பயணிகள் கவனத்திற்கு..!

அயல்நாட்டில் இருந்து இந்தியா வரும் பயணிகலுக்கு என்று சில கட்டுப்பாடுகள் இருப்பது பொதுவாக நாம் அறிந்த ஒன்றே. ஆனால், அதைப்பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் சிலர் விதிமுறைகளை மீறி பொருட்களை எடுத்து வந்து தேவையில்லாத சிக்கல்களை சந்திக்கின்றனர்.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கட்டாயம் அறிய வேண்டிய அடிப்படைத் தகவல்களை அறிய விமான நிலையங்களிலேயே அறிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது.

இந்திய குடியுரிமை பெற்ற பயணிகள் ரூபாய் ஐம்பதாயிரம் மதிப்புள்ள பொருட்களையும், அயல்நாட்டு பயணிகள் ரூபாய் பதினைந்தாயிரம் மதிப்புள்ள பொருட்களையும் சுங்க வரி செலுத்தாமல் எடுத்துச் செல்லலாம். இதற்குமேல் கொண்டுவரப்படும் பொருட்களுக்கு, பொருட்களின் மதிப்பில் 38.50% என்ற அளவில் வரி செலுத்தப்படும்.

இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வரிச்சலுகை கிடையாது.

ஒரு பயணிக்கு உரிய வரிச்சலுகையை மற்றொரு பயணிக்கு உரிய வரிச்சலுகையோடு சேர்ப்பதற்கு அனுமதி கிடையாது.

மேலும், இதுபோன்ற பல முக்கிய தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன.