இந்தியாவின் ரேப்பிட் ரெஸ்பான்ஸ் சிறப்பு மருத்துவ குழுவினர் குவைத் வருகை..!!

Rapid response team from India reaches Kuwait to combat COVID-19.

குவைத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலிருந்து ரேப்பிட் ரெஸ்பான்ஸ் என்ற சிறப்பு மருத்துவ குழுவினர் இந்திய ராணுவ விமானத்தின் மூலம் குவைத் வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் பிரதமர் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆகியோருக்கு இடையில் கடந்த வாரத்தில் தொலைபேசி மூலம் நடந்த பேச்சுவார்த்தையில் இரண்டு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர ஒத்துழைப்பு குறித்து உரையாடல் நடைபெற்றதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் S.ஜெயசங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

அதன் அடிப்படையில் மருத்துவக் குழுவினர் குவைத் வந்துள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்தியா மற்றும் குவைத் நாடுகளுக்கு இடையேயான நட்புக்கு இது சான்றாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தவிர இந்தியா நட்பு நாடுகளுக்கு பிரச்சினையான காலங்களில் இதற்கு முன்னரும் இதுபோல் மருத்துவ குழுவினரை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்புப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளடங்கிய 15 பேர் கொண்ட குழு குறைந்தது 2 வாரங்கள் குவைத்தில் தங்கி சேவைகளை வழங்குவார்கள் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.