வெளிநாட்டிலிருந்து குவைத் திரும்புவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் – MOH

Quarantine for 14 days for citizens returning from abroad. (photo : TimesKuwait)

வெளிநாட்டிலிருந்து திரும்பும் அனைத்து குடிமக்களும் குவைத்திற்குள் நுழைந்த நாளிலிருந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, தேவை ஏற்பட்டால் மட்டுமே அவர்கள் கொரோனா வைரஸுக்கு ஸ்மியர் (இரத்த மாதிரி) பரிசோதனை செய்ய வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது பொது சுகாதாரத் துறையின் பரிந்துரைகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு வழங்கிய சுகாதார வழிகாட்டுதல்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.