குவைத்தில் பொதுக்கூட்டங்கள் கூடினால் அபராதம் மற்றும் சிறைத்தண்டனை விதிக்கப்படும்..!!

Public gatherings to be punished with fines and imprisonment. (photo : Times Kuwait)

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் அமைச்சர்கள் கவுன்சில் மற்றும் சுகாதார அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளை மீறுவதால், திருமணங்கள், கட்சிகள், விருந்துகள் மற்றும் வரவேற்புகள் உள்ளிட்ட பொதுக் கூட்டங்களை தவிர்க்குமாறும், மீறினால் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டத்தின் படி, மீறுபவர்களுக்கு மூன்று மாத சிறைத்தண்டனையும், 50 KD முதல் 200 KD இடையில் அபராதமும் அல்லது இரண்டில் ஒன்றும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் மக்களிடையே கொரோனா வைரஸ் தொற்று அதிக விகிதத்தைக் காட்டிய சமீபத்திய புள்ளிவிவரங்களைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளை கண்காணிக்க காவல்துறை நியமிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் ஷேக் டாக்டர் பாசெல் அல்-சபா வியாழக்கிழமை கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்கத் தவறியது கொரோனா வைரஸ் மேலும் பரவ வழிவகுத்தது, நிலைமை “கையை விட்டு வெளியேறக்கூடும்” என்று எச்சரித்தார்.

குவைத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஐந்து கட்ட மறுதொடக்கம் திட்டத்தின் தற்போதைய முதல் கட்டத்தை சுகாதார நிலைமையை தொடர்ச்சியாக மறு மதிப்பீடு செய்வதன் மூலம் பராமரிக்க முடிவு செய்யப்பட்டது, இரண்டாம் கட்டத்திற்கு பாதுகாப்பாக செல்ல தேவையான சுகாதார தரங்கள் அடையும் வரை ஓன்றாம் கட்டம் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08