கொரோனா வைரஸிலிருந்து குவைத் மக்கள் மற்றும் வெளிநாட்டினரைப் பாதுகாப்பதே எங்கள் முன்னுரிமை..!!

Deputy Prime Minister and Minister of the Interior, Chairman of the Civil Defense Committee, Anas Khaled Al-Saleh. (photo : Arab Times)

துணை பிரதமரும் உள்துறை அமைச்சரும், சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவருமான அனஸ் கலீத் அல்-சலேஹ் அவர்கள் வெள்ளிக்கிழமை கூட்டத்திற்கு தலைமை தாங்கினார், இதில் சுகாதார அமைச்சர் டாக்டர் ஷேக் பசில் அல் சபா மற்றும் துணை அமைச்சர் முன்னிலையில் உள்துறை குழுவின் துணைத் தலைவர், லெப்டினன்ட் ஜெனரல் ஈஸ்ஸம் அல்-நஹாம் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

பாதுகாப்பு, உள்துறை, தேசிய காவலர், வெளியுறவு, சுகாதாரம், தகவல், தீ, பொது நிர்வாகம், நிதி, கல்வி, சமூக விவகாரங்கள், தொழிலாளர், ரெட் கிரசண்ட் சொசைட்டி, உணவு, ஊட்டச்சத்துக்கான பொது ஆணையம், பொது அமைச்சகம், சிவில் ஏவியேஷன் நிர்வாகம், சுங்க பொது நிர்வாகம், குவைத் நகராட்சி மற்றும் குவைத் செய்தி நிறுவனம் ஆகிய துறைகளிலிருந்து ஏராளமான அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

கொரோனா வைரஸின் அபாயங்களை எதிர்கொள்ள அனைத்து மனித, தொழில்நுட்ப மற்றும் சுகாதார திறன்களையும் அர்ப்பணிப்பதன் முக்கியத்துவத்தையும், குடிமக்களையும் வெளிநாட்டினரையும் பாதுகாப்பதற்காண அவசியத்தையும் வலியுறுத்தினார். மேலும், குவைத் மக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது நமது முதன்மையான கடமை என்று அல்-சலேஹ் அவர்கள் தெரிவித்தார்.

சமூக ஊடகங்கள் மூலம் குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினரை வழிநடத்துவதற்கும், வதந்திகள் மற்றும் தவறான செய்திகளை மறுப்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும் என்று அல்-சலேஹ் தெரிவித்தார். மேலும், அங்கீகரிக்கப்பட்ட சமூக ஊடகங்கள் மற்றும் பிற அரசாங்க நிறுவனங்களின் உள்துறை அமைச்சக வலைத்தளங்களை பின்பற்றுமாறு மக்களுக்கு வலியுறுத்தியுள்ளார்.

source : Arab Times