குவைத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் இரண்டு செவிலியர்களின் முகத்தில் எச்சில் துப்பியதாக புகார்..!!

Person infected with coronavirus spits on face of two nurses in kuwait. (photo : Bristol live)

குவைத்தில் இரண்டு செவிலியர்கள் வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் மிஷ்ரெப்பில் அமைந்துள்ள கள (field) மருத்துவமனையில் வேண்டுமென்றே அவர்களின் முகங்களில் துப்பியதாகக் கூறி, வைரஸை பார்ப்பமுயன்றதாக வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோயாளி கள மருத்துவமனையில் சேவையைப் பற்றி புகார் அளித்து, அவரை கவனித்துக்கொண்டிருந்த செவிலியர்களைக் கத்தத் தொடங்கினார், அந்த இடம் தனக்கு ஏற்றதல்ல என்று கூறி, கோபத்தில் அவர் முகத்தில் துப்பினார், வேண்டுமென்றே வைரஸை பரப்பி முயன்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு செவிலியர்களும் மருத்துவமனை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர், மேலும் அவர் மீது காவல் நிலையத்தில் வேண்டுமென்றே வைரஸ் பறப்பியதாக வழக்கு பதிவு செய்ய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

சிகிச்சையை முடித்த பின்னர் அவரை கைது செய்ய முடிவு செய்யப்பட்டது மற்றும் அவருக்கு எதிராக தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.