குவைத் விமான நிலைய அதிகாரிகள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்புகள்..!!

passport control procedures released by kuwait international airport officers. (image credit: ktp fbpage)

பயணிகள் பலர் விமான நிலையத்தில் இந்த தவறை தொடர்ந்து செய்து வருவதையடுத்து அதிகாரிகள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளனர்.

1) தயவுசெய்து உங்கள் பாஸ்போர்ட்டை அதிகாரிகளிடம் காண்பிக்கும்போது அதை உறையிலிருந்து அகற்றி பின்னர் கொடுக்கவும்.
(எடுத்துக்காட்டாக: இந்தியாவில் கடந்த சில வருடங்களாக வருகிற புதிய பாஸ்போர்ட் உடன் உறை(Cover) வருகிறது. பாஸ்போர்ட் சேதம் அடையாமல் இருக்க இது பாஸ்போர்ட் துறை மூலம் வழங்கப்படுகிறது)

2) முகக் கண்ணாடி அதாவது சன்கிளாஸ்கள் மற்றும் தொப்பிகளை நீக்கவும்.(உங்கள் முகம் மறையும் அளவுக்கு எதையும் பயன்படுத்த கூடாது) பிறகு பரிசோதனை அதிகாரி( Immigration officer)முன்னர் செல்லவும்.

3) பாதுகாப்பு காரணங்களுக்காக விமான நிலையத்தின் பயணிகள் பரிசோதனை பகுதிகள் மற்றும் அதிகாரிகள் இருக்கும் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மொபைல் போன்கள் மற்றும் கேமரா பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளது எனவே இந்த தவறை செய்யாமல் தவிரவும்.