குவைத்தில் டாக்ஸியில் “ஒரு பயணத்திற்கு ஒருவர் மட்டும்” என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் – டாக்ஸி கூட்டமைப்பு தலைவர்

'one passenger' Taxi service decision needs to be reviewed. (image credit ; Huge margin)

குவைத் வர்த்தக டாக்ஸி வணிகர்களின் கூட்டமைப்பின் தலைவர் கைரன் அல் அஜ்மி அவர்கள், டாக்ஸிகள் மற்றும் கால் டாக்ஸியின் சேவையில் ஒரு பயணிகளுடன் மட்டுமல்லாமல் முன்பு போலவே இயக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அல்-அஜ்மி அல் ராய் தினசரிடம் கூறுகையில், டாக்ஸி அலுவலகங்களின் உரிமையாளர்கள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனர், மேலும் அவர்கள் அலுவலக வாடகைக்கு கூடுதலாக கார் கடன்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களின் ஊதியங்களையும் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

இந்த முடிவை அதிகாரிகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், சுகாதார தேவைகளுக்கு ஏற்ப மட்டுமே செயல்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், ஒரு கணவன், மனைவி, அல்லது ஒரு தாய் மற்றும் அவரது மகன் அல்லது ஒரு பெண் மற்றும் அவளுடைய வேலைக்காரன் இருந்தால், ஒரு ஓட்டுநர் அத்தகைய சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்…?

இதுபோன்ற பிரச்சனைகள் இருப்பதால் ஒரு பயணத்திற்கு ஒருவர் மட்டும் பயணிக்கவேண்டும் என்ற முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms