குவைத்தில் ஊரடங்கு காலத்தில் மருத்துவ அனுமதி பெற இணையதள link ..!!

obtaining medical permits during total lockdown period in kuwait. (photo : Arab Times)

சிவில் தகவலுக்கான குவைத் பொது ஆணையம் முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவ அனுமதியைப் பெறுவதற்கு இணையதள link-ஐ (https: // curfew.paci.gov.kw) வழங்கியுள்ளது.

இந்த link-ஐ பயன்படுத்தி பயனர் மருத்துவமனை மற்றும் சுகாதார மையத்தை தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனை அல்லது சுகாதார மையத்தை தேர்வு செய்தவுடன், பயனர் உறுதிப்படுத்தவேண்டும், பின்னர் அவரின் இருப்பிடத்தை மருத்துவமனையின் இருப்பிடத்தோடு ஒப்பிடும் என்று அதிகாரம் செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

இதில் தவறுகள் ஏதும் நேரிட்டால், சட்ட பொறுப்புணர்வுக்கு கூடுதலாக எதிர்காலத்தில் எந்தவொரு அனுமதியை பெறுவதிலிருந்து அந்த நபர் தடுக்கப்படுவார் என்று குவைத் செய்தி நிறுவனத்திடம் (KUNA) தெரிவிக்கப்பட்டுள்ளது.