இந்தியாவிலுருந்து குவைத் செல்பவரா நீங்கள்; இதை கட்டாயம் படிக்கவும்..!!

Circular issued by kuwait DGCA on Tuesday. (photo : Arab Times)

மார்ச் 8-ஆம் தேதி முதல் இந்தியா, பங்களாதேஷ் மற்றும் இலங்கை போன்ற நாடுகளிலிருந்து குவைத்திற்கு செல்லும் நபர்கள் குவைத் தூதரகங்களால் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையங்களால் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிசெய்த சுகாதார சான்றிதழை எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சான்றிதழை எடுத்துச் செல்லாத நபர்களை அதே விமானத்தில் திருப்பி அனுப்பப்படும் மற்றும் குவைத்தின் சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் (DGCA) வெளியிட்டுள்ள அறிக்கையை மீறியதற்காக அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ், இந்தியா, பங்களாதேஷ், எகிப்து, சிரியா, அஜர்பைஜான், துருக்கி, இலங்கை, ஜார்ஜியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளிலிருந்து குவைத்திற்கு செல்லும் நபர்கள் கட்டாயமாக
அவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் குவைத் மாநில தூதரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சுகாதார மையங்களால் வழங்கப்படும் முழுமையான மருத்துவ பரிசோதனை (PCR) சான்றிதழ் வைத்திருக்கவேண்டும்.

மேலும், மேலே குறிப்பிட்டுள்ள நாடுகளில் குவைத் தூதரகம் இல்லாத நிலையில் அந்நாட்டின் சான்றளிக்கப்பட்ட சுகாதார அதிகாரத்தால் அங்கீகரிக்கப்படும் என்று குவைத் DGCA-வின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இந்த அறிக்கை குவைத் குடிமக்களுக்கு விதிவிலக்காகும் என்பது குறிப்பிடத்தக்கது.

source : Times of India