முட்லா விபத்தின் இறப்பு எண்ணிக்கை 6-ஆக உயர்வு..!!

Rescue personnel work at the scene of the earth collapse in Mutlaa. (image source : Kuwait Times)

முட்லா குடியிருப்பு நகரத்தில் ஏற்பட்ட பூமி சரிவில் 6 தொழிலாளர்கள் இறந்துவிட்டதாகவும், மூன்று பேர் காயமடைந்ததாகவும் தீயணைப்புத் துறை நேற்று அறிவித்தது.

அதிகாரபூர்வமாக விசாரணைகள் முடியும் வரை வீட்டுவசதி நலனுக்கான பொது அதிகாரம் அந்த இடத்தில் உள்ள அனைத்து கட்டுமானங்களையும் நிறுத்துவதாக அறிவித்தது.

பொதுப்பணித்துறை அமைச்சர் மற்றும் வீட்டுவசதி அமைச்சரான Rana Al-Fares அவர்களின் நேரடி அறிவுறுத்தலின் பேரில் விபத்து குறித்து விசாரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அதிகாரம் தெரிவித்தது.

முட்லா விபத்தில் நேபாள தொழிலாளர்கள் இறந்ததற்காக நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரிக்கு அமீர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா அவர்கள் நேற்று இரங்கல் தெரிவித்தார். மேலும், இளவரசர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா மற்றும் பிரதமர் ஷேக் சபா அல்-கலீத் அல்-ஹமாத் அல்-சபா ஆகியோரும் தங்களது இரங்கலை தெரிவித்தனர்.

அல்-ஹுரைட்டி சட்ட நிறுவனத்தின் இயக்குநர் ஜெனரல் மற்றும் இந்த திட்டத்தின் பொறுப்பாளரான சீன நிறுவனத்தின் சட்ட பிரதிநிதி Gezhoubaou அவர்கள் இறந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துள்ளார்.

Source : Kuwait Times