குவைத்தில் ஓட்டுநர் சோதனைக்கான அப்பாய்ன்மெண்ட் முன்பதிவை பெறுவதற்கான ஆன்லைன் வசதி அறிமுகம்..!!

MoI launches online booking for driving test appointment. (photo : IIK)

குவைத்தில் ஓட்டுநர் சோதனைக்கான ஆன்லைன் அப்பாய்ன்மெண்ட் முன்பதிவை ஜூன் 28 ஞாயிற்றுக்கிழமை முதல் தொடங்குவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விண்ணப்பதாரர் உள்துறை அமைச்சகத்தின் வலைத்தளத்திற்கு சென்று (www.moi.gov.kw) e-services-ஐ தேர்வுசெய்து பின்னர் General Traffic Department-ஐ தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர் பொது போக்குவரத்துத் துறையால் வழங்கப்பட்ட செல்லுபடியாகும் படிவத்தை (valid form) கொண்டிருக்க வேண்டும் என்றும், படிவம் காலாவதியானால், அது புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் நிர்வாகம் தெளிவுபடுத்தியுள்ளது.

MoI இன் படி, முன் நியமனம் இல்லாமல் யாரும் கட்டிடத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்துத் துறையில் ஓட்டுநர் சோதனை பிரிவுகள் 6/30/2020 செவ்வாய்க்கிழமை முதல் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும் பிற்பகல் பிரிவு மதியம் 1:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையிலும் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08