COVID-19; குவைத் கல்வி அமைச்சகத்தின் பணிகள் நிறுத்தம்..!!

Ministry of Education shuts down after discovering coronavirus infection. (photo : KUNA)

கல்வி அமைச்சகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிந்த பின்னர் அதன் அனைத்து பணிகளை நிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உதவி துணை செயலாளரும், அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளருமான Faisal Al-Maqseed அவர்கள் திங்களன்று (மே 4) ஒரு செய்திக்குறிப்பில், தூர கற்பித்தல் பாடங்கள் (Long distance teaching) பதிவு செய்யப்பட்டுவந்த அனைத்து ஸ்டுடியோக்களையும் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் நெருக்கடியில், அமைச்சகத்தின் சில துறைகள் தேவையான பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கான பணிகள் தொடர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சகத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறிந்த பின்னர், முழு அமைச்சகக் கட்டடமும் பணிகளை நிறுத்தியுள்ளது.