குவைத்தில் இயல்பு வாழ்க்கைக்கு திருப்புவதற்கான திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடவடிக்கைகளை வெளியிட்ட சுகாதார அமைச்சர்..!!

Minister of Health issues directives to be followed in second stage. (photo : mathrubhumi)

குவைத் சுகாதார அமைச்சர் Dr. பசில் அல்-சபா அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு படிப்படியாக திருப்புவதற்கான திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பணியிடங்கள், கஃபே போன்ற இடங்களில் பின்பற்ற வேண்டிய சுகாதார நடவடிக்கைகள் மற்றும் தேவைகளை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளதாக அல்-கபாஸ் தினசரி தெரிவித்துள்ளது.

பணியிடங்களில் தொழிலாளர்களிடையே இரண்டு மீட்டருக்கும் குறையாத (ஒருவருக்கு 10 சதுர மீட்டர்) ஒரு சமூக தூரத்தை உறுதி செய்ய வேண்டும் என்றும், மேலும் நாற்காலிகளுக்கிடையே குறைந்தபட்சம் இரண்டு மீட்டர் தூரம் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு அறைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் ஒன்றுகூடுவதைத் தடுக்க வேண்டும் என்றும், பணியிடத்திலும் பிற இடங்களிலும் குழுக்களாக சாப்பிடுவதும் குடிப்பதும் அனுமதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், எல்லா பணியிடங்களிலும் எல்லா நேரங்களிலும் முகமூடி அணிவது கட்டாயமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வணிக வளாகங்களைப் பொறுத்தவரை, அனைத்து பொழுதுபோக்கு நடவடிக்கைகளையும் தடைசெய்யப்பட்டுள்ளது, பார்க்கிங் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன, அதே போல் புகைபிடிக்கும் அறைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவகங்கள் மற்றும் கஃபேக்கள் ஆகியவற்றைப் பொறுத்தவரை, கடைகளில் உட்கார்ந்திருக்காமல் ஆர்டரைப் பெற வேண்டும் என்றும், அதே நேரத்தில் தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வெப்பநிலையைச் சரிபார்க்கவும், 37.5 டிகிரிக்கு மேல் வெப்பநிலை உள்ளவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயல்புநிலை திட்டத்திற்கு திரும்புவதற்கான இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக அவென்யூஸ், ஷார்க் சந்தை மற்றும் 360 மால் உள்ளிட்ட அனைத்து வணிக வளாகங்களையும் திறக்க அமைச்சரவை முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08