விடுமுறையில் தாயகம் சென்ற இந்தியாவை சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் சிறப்பு விமானம் மூலம் குவைத் வருகை..!!

Medical staffs on vacation in India to return back to Kuwait. (photo : IIK)

குவைத்தில் உள்ள பல்வேறு அரசு துறைகளில் வேலை செய்யும் இந்தியாவைச் சேர்ந்த சுகாதாரத்துறை ஊழியர்கள் விடுமுறையில் தாயகம் சென்று நேரத்தில் கொரோனா நோய்தொற்று காரணமாக விடுமுறை முடித்து மீண்டும் குவைத் வர முடியாதபடி சிக்கியுள்ளனர். இந்த சுகாதார ஊழியர்கள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் அடுத்தடுத்த மூன்று நாட்களில் குவைத்துக்கு திரும்பப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முதல் விமானத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட 322 இந்தியர்கள் இன்று வியாழக்கிழமை குவைத் திரும்புவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் மூன்று நாட்களில் 714 சுகாதார ஊழியர்கள் திருப்பி குவைத் வருவார்கள் என்பது தெரியவந்துள்ளது. இவர்களை அழைத்து வருவதற்கான அனைத்து நடவடிக்கையிலும் குவைத் சுகாதார அமைச்சகம் முன்னிலை வகித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

குவைத்தில் உள்ள இந்திய தூதரகமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்கள் திரும்பி வருவதற்கு தேவையான அனைத்தையும் தயார் செய்து புறப்படுவதற்கு ஆயத்தமாக அறிவுறுத்தினர். இதன் அடிப்படையில் குவைத் ஏர்வேஸ் விமானம் இன்று வியாழக்கிழமை அதிகாலை 4:30 மணிக்கு நெடும்பசேரி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 7:00 மணிக்கு குவைத் வந்து சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது விமானம் கோழிக்கோட்டிலிருந்து நாளை (ஜூன் 12) வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டுள்ளது. இதுபோல் மூன்றாவது விமானம் சனிக்கிழமை (ஜூன் 13) காலை கொச்சியில் இருந்து இந்தியர்களுடன் குவைத்திற்கு திரும்பும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.