குவைத்தில் நடைபெற்ற Made In Qatar எக்ஸ்போவின் மூன்றாம் நாள் களைகட்டியது..!!

The Chairman of Qatar Chamber, Sheikh Khalifa bin Jassim Al Thani, touring the pavilions of the ‘Made in Qatar’ exhibition being held in Kuwait. (Photo : The Peninsula)

கத்தார் சேம்பரின் (QC) தலைவர் ஷேக் கலீஃபா பின் ஜாசிம் அல் தானி அவர்கள் குவைத்தில் நடைபெற்ற ‘Made In Qatar’ கண்காட்சியில் கலந்துகொண்டு பார்வையிட்டு சிறப்பித்தார்.

குவைத் நிறுவனங்களுடனான கலந்துரையாடல்கள் குறித்து கண்காட்சியாளர்கள் QC தலைவருக்கு தெரிவித்தனர். அவருடன் QC வாரிய உறுப்பினர் டாக்டர் காலித் அல் ஹஜ்ரி மற்றும் இயக்குநர் ஜெனரல் சலேஹ் பின் ஹமத் அல் ஷர்கி மற்றும் பல தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர்.

எக்ஸ்போவின் மூன்றாம் நாளில் குவைத் தொழிலதிபர்கள் மற்றும் அனைத்துத் துறைகளிலும் உள்ள குவைத் நிறுவனங்களின் பிரதிநிதிகள் அதிகமானோர் கலந்துகொண்டனர். அவர்கள் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் கூட்டுத் தொழில்களை உருவாக்குவதற்காக ஆர்வமாக கலந்துகொண்டனர்.

கத்தாரில் உள்ள குவைத் நிறுவனங்களுக்கும், குவைத்தில் உள்ள கத்தார் நிறுவனங்களுக்கும் கூட்டாண்மை மற்றும் கூட்டணிகளை உருவாக்குவதற்கும் வணிக நிறுவனங்களை நிறுவுவதற்கும் பல கத்தார் கண்காட்சி நிறுவனங்கள் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது.

மேலும், கத்தார் நாட்டைச் சேர்ந்த அல் பைடா குழுமமும், குவைத்தை சேர்ந்த குவெஸ்ட் மெடிக்கல் கம்பெனியும் இணைந்து மருத்துவமனைகள் நிர்வாகத்தில் சிறப்பு நிறுவனங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

Source : The Peninsula