குவைத்தில் வெட்டுக்கிளிகள் மூலம் மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுகிறதா..?

Locusts do not transmit corona virus to humans in kuwait.

வேளாண் மற்றும் மீன் வளங்களுக்கான பொது ஆணையம் (PAAAFR) கபாட் பகுதியில் உள்ள வெட்டுக்கிளிகளை கண்காணித்துவருவதாக அல்-ராய் தினசரி செய்தி தெரிவித்துள்ளது.

மேலும், இவைகளை கண்காணிக்க பணியாளர்களை நியமித்து எந்த திசையில் நகர்கின்றன என்பதை கண்காணித்துவருவதாக தெரிவித்துள்ளது.

பூச்சியியல் ஆராய்ச்சியாளர் டாக்டர் ஜெனன் அல்-ஹர்பி அவர்கள் கூறுகையில், வெட்டுக்கிளிகள் மனிதர்களுக்கு கொரோனா வைரஸை பரப்புவதில்லை இருப்பினும், இவை ஈச்சமரம் போன்ற மரங்களுக்கு ஆபத்தானது என்று தெரிவித்தார்.

குவைத் விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அப்துல்லா அல் திமக் அவர்கள் குவைத் விவசாயிகளுக்கு வக்ரா மற்றும் அல்-அப்தாலியில் உள்ள வெட்டுக்கிளிகளால் சேதமடைந்துள்ள அவர்களின் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

source : Arab Times