குவைத்தில் PACI திறந்த முதல் நாளே கூட்டம் அலைமோதியது..!!

Large crowd at PACI on the first day of opening. (photo : Al Qabas)

குவைத்தில் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் தங்கள் சிவில் அடையாள அட்டைகளை பெற மற்றும் பிற பரிவர்த்தனைக்காக சிவில் தகவல் பொது ஆணையம் PACI திறந்த முதல் நாளில் பெரும் கூட்டம் கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலையிலிருந்தே ஏராளமான மக்கள் PACI அலுவலகத்தில் திரண்டனர். அறிக்கையின்படி, ஊழியர்களும் பாதுகாப்புத் துறையும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த கடுமையாக முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளில், சுமார் 2,500 பொதுமக்கள் திரண்டனர், இதில் 2,000 பேர் சிவில் ஐடிகளை பெறவும், 500 பேர் மற்ற வேலைகளுக்கு வந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

PACI நேற்றையதினம் ஆன்லைனில் கிடைக்கும் அதன் சேவை மற்றும் PACI அலுவலகத்திற்கு தனிப்பட்ட வருகை தேவைப்படும் சேவைகளின் பட்டியலை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08