குவைத் கைப்பந்து அணி அல்-ஐன் அணியை வென்று அசத்தல்..!!

Kuwait’s volleyball team defeats Al-Ain. (image source : Kuwait Times)

குவைத் கிளப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கைப்பந்து போட்டியில் குவைத் கிளப் கைப்பந்து அணி 3-0 என்ற கணக்கில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அல்-ஐனை வென்றது.

இந்த போட்டி 37 வது வளைகுடா கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் சுற்றாகும் மற்றும் இது பிப்ரவரி 10 வரை தொடர்ந்து நடைபெறும்.

மூன்று ஆட்டங்களின் முடிவுகள்: (30-28, 25-16, 26-24)

சவுதி அரேபியாவின் அல்-ஹிலால் ஓமானின் அல்-சீப் அணியை 3-1 (25-19, 25-21, 26-24) என்ற கணக்கில் தோற்கடித்தது. புள்ளி பட்டியலில் குவைத் கிளப் கைப்பந்து அணிகள் முதலிடத்தில் உள்ளது, கத்தார் காவல்துறை இரண்டாவது இடத்திலும், ஹிலால் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது.

மேலும், அல்-ஐன், தார் குலைப் மற்றும் சீப் அணிகள் எந்த புள்ளிகளும் பெறாமல் உள்ளது.

Source : Kuwait Times