குவைத்தில் கொரோனா வைரஸால் அறுவை சிகிச்சை நிபுணர் மரணம்; சுகாதாரத்துறை அமைச்சர் இரங்கல்..!!

Kuwaiti doctor dies from Covid-19. (image credit : eg24.new)

குவைத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மருத்துவர் ஒருவர் இறந்துவிட்டார் என்று துயரமான செய்தி வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதன் விளைவாக குவைத் அறுவை சிகிச்சை நிபுணர் Dr. அப்துல்லா ஷூயிப் அவர்கள் அல்-ஜஹ்ரா மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதன் விளைவாக இறந்த முதல் குவைத் அறுவை சிகிச்சை நிபுணர் Dr. அப்துல்லா ஷூயிப் ஆவார்.

Dr. அப்துல்லா ஷூய்பின் மரணத்திற்கு சுகாதார அமைச்சர் Dr. பசில் அல் சபா இரங்கல் தெரிவித்தார்.

மேலும், “எங்கள் சகா டாக்டர் அப்துல்லா ஷூய்பின் குடும்பத்திற்கு எனது உண்மையான இரங்கலும், மிகுந்த அனுதாபமும்” என்று அமைச்சர் ட்வீட் செய்துள்ளார்.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

?Facebook : https://www.facebook.com/tamilmicsetkw/

? Twitter :  https://www.twitter.com/kuwaittms