குவைத் இனி எண்ணெய் துறையில் வெளிநாட்டினரை நியமிக்காது..!!

Kuwait will no longer hire expats in oil sector. (photo : IIK)

குவைத்தில் பாராளுமன்றக் குழு அமர்வில் உரையாற்றிய எண்ணெய் துறை அமைச்சர், 2020-2021 ஆம் ஆண்டிற்கான KPC மற்றும் அதன் துணை நிறுவனத்தில் குவைத் அல்லாதவர்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள் என்றும் சிறப்பு ஒப்பந்தங்களுக்கான அவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

சந்தை வீழ்ச்சி காரணமாக உலகளாவிய கொரோனா வைரஸ் நெருக்கடியின் போது குவைத் எண்ணெயின் விலை குறைந்துவிட்டது, இருப்பினும் சந்தைகள் மீண்டு, கச்சா விலைகள் உயர்ந்துள்ளன என்றார்.

எண்ணெய் துறை வருமானத்திற்கான ஒரே ஆதாரமாக இருக்கக்கூடாது, தேசிய பொருளாதாரத்தை உயர்த்துவதில் தனியார் துறையை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார், கூடுதலாக அதைப் பாதுகாக்க சட்டங்களை இயற்றியுள்ளதாக தெரிவித்தார்.