குவைத்தில் வெள்ளிக்கிழமை (ஜும்மா) தொழுகைக்கு அனுமதி..!!

Kuwait to start Friday prayers from July 17. (photo : IIK)

குவைத் அரசாங்க அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் முஸ்ராம் கூறுகையில், மசூதிகளில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்த அனுமதிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சகத்திற்கு அறிவுறுத்த அமைச்சர்கள் சபை முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருகின்ற ஜூலை 17, வெள்ளிக்கிழமை முதல், வெள்ளிக்கிழமை தொழுகைகள் அனைத்து சுகாதார நடவடிக்கைகளுடன் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.

குவைத் அதிகாரிகள் மார்ச் 13ஆம் தேதி நாட்டில் COVID-19 பரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை தொழுகைகளை மசூதிகளில் பிராத்தனை செய்வதை நிறுத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08