குவைத் அடுத்த வாரம் ஜப்பானில் இருந்து Avigan என்ற COVID-19 மருந்தைப் பெற உள்ளது..!!

Kuwait to receive Avigan COVID-19 drug from Japan next week. (photo : Deccan herald)

கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு பல நாடுகள் நடத்திய மருத்துவ பரிசோதனைகளில் பாசிட்டிவ் முடிவுகளுக்கு பிறகு, ஜப்பானிலிருந்து Avigan என்று சொல்லக்கூடிய மருந்துடன் அடுத்த வாரம் நாட்டிற்கு முதல் கப்பல் வரவுள்ளதாக குவைத்தின் சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தெரிவித்துள்ளது.

குவைத் செய்தி நிறுவனத்திடம் ஒரு அறிக்கையில், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் உதவி துணை செயலாளர் Dr. அப்துல்லா அல்-பத்ர் அவர்கள் கூறுகையில், மருந்துகளின் முதல் ஏற்றுமதி அவசரகால மற்றும் மனிதாபிமான நோக்கங்களுக்குள் வந்துள்ளது என்றும் ஜப்பானியர்களிடமிருந்து வணிக மதிப்பைக் கொண்டு செல்லவில்லை என்றும் உறுதிப்படுத்தினார்.

இந்த மருந்தின் பயன்பாடு ஜப்பான் தயாரித்த வழிகாட்டுதல்களின்படி மற்றும் உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் மற்றும் குவைத்தில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளின்படி இருக்கும் என்று அல்-பத்ர் அவர்கள் கூறினார்.

ஏப்ரல் 19, 2020 அன்று குவைத் மற்றும் ஜப்பான் அரசாங்கங்களுக்கிடையில் ஒரு ஒப்பந்தம் செய்யப்படுள்ளது, சுகாதார மற்றும் வெளியுறவு அமைச்சகங்களுக்கும் டோக்கியோவில் உள்ள குவைத் தூதரகத்திற்கும் இடையில் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் நீடித்த ஒருங்கிணைப்பை அல்-பத்ர் பாராட்டினார்.