சீனாவிலிருந்து தொடர்ந்து உணவு இறக்குமதி செய்ய குவைத் முடிவு..!!

Kuwait to continue importing food from China – No Ban. (image credit : zaywa)

உலக சுகாதார அமைப்பு (WHO) சீனாவிலிருந்து உணவு இறக்குமதி செய்வதை தடை செய்ய எந்த நாடுகளுக்கும் பரிந்துரைக்கவில்லை மற்றும் எந்த நாடும் அவ்வாறு செய்யவுமில்லை என்று குவைத்தின் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கான பொது ஆணையம் தெரிவித்துள்ளது.

WHO மற்றும் பிற உணவு பாதுகாப்பு அமைப்புகளின் விஞ்ஞான ஆதாரங்களின் அடிப்படையில், கொரோனா வைரஸ் பரப்புவதற்கான ஆதாரமாக எந்த ஒரு உணவும் அடையாளம் காணப்படவில்லை என்று துணை இயக்குனர் Reem Al-Felaij தெரிவித்தார்.

WHO, ஐக்கிய நாடுகளின் உணவு துறை மற்றும் வேளாண் அமைப்பு இணைந்து நிறுவிய சர்வதேச உணவு பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டமைப்பு (INFOSAN) வெளியிடும் உணவு பாதுகாப்பு அறிக்கைகளை உன்னிப்பாக கண்காணித்து வருவதாக குவைத் அமைப்பு தெரிவித்துள்ளது.

NEWS : Arab Times