குவைத்தில் டாக்ஸி ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு நிபந்தனை..!!

Kuwait Taxi Roaming
Photo Credit : IIK

குவைத்தின் ரோமிங் மற்றும் கால் டாக்ஸிகளின் ஓட்டுநர் வேலைக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்படுள்ளது.

இந்த நிபந்தனைகளை உள்துறை அமைச்சகத்தின் போக்குவரத்து நடவடிக்கைகளுக்கான உதவி துணை செயலாளர் மேஜர் ஜெனரல் ஜமால் அல் சயீக் அவர்கள் வெளியிட்டுள்ளார் என்று அல்ஜரிடா செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

இவ்வேலைக்கு விண்ணப்பிப்பவர் வேலை இல்லாதவர் என்பதை உறுதி செய்யும் வகையில் சமூக பாதுகாப்புக்கான பொது நிறுவனத்திடம் இருந்து சான்றிதழ் வழங்க வேண்டும்.

இதனை தொடர்ந்து, குற்றவியல் சான்றுகளின் பொது நிர்வாகத்தால் வழங்கப்பட்ட நல்ல நடத்தைக்கான சான்றிதழ் மற்றும் சுகாதார உடற்பயிற்சி சான்றிதழையும் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

மேலும், விண்ணப்பிப்பவர் குவைத்திலுள்ள அனைத்து பகுதியிலும் புவியியல் சோதனையில் தேர்ச்சியாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விண்ணப்பங்களை பொது போக்குவரத்து துறையிடம் சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter