குவைத்தில் 70 வயதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கான வேலை அனுமதிகள் நிராகரிப்பு..!!

Kuwait stops work permits for expats over 70. (image credit:kuwait times)

மனிதவளத்திற்கான பொது அதிகாரசபை 70 வயதை எட்டும் வெளிநாட்டினர் எந்த ஒரு வேலையில் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் அவர்களின் புதுப்பிப்பதற்கான பணி அனுமதி விண்ணப்பங்களை நிராகரிக்கத் தொடங்கியுள்ளதாக அல்-அன்பா தினசரி நேற்று அதிகாரசபையின் அதிகாரப்பூர்வ ஆதாரத்தை மேற்கோள் காட்டி செய்தியை வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த முடிவு 65 வயதை எட்டும் விண்ணப்பதாரர்களுக்கான பணி அனுமதி வழங்கல் விண்ணப்பங்களை நிராகரிப்பதற்காக படிப்படியாக பின்பற்றப்படும் முதல் படி ஆகும்.

வயது வரம்பை எட்டும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் உள்துறை அமைச்சகத்தின் வசிப்பிட விவகாரத் துறையின் விதிமுறைகளின்படி குடும்ப சார்பு விசாவிற்கு மாற்ற முடியும் என்று வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

source : kuwait times