குவைத்திலிருந்து 170 இந்தியர்கள் இன்று தாயகத்திற்கு வருகை..!!

Flight cancelled for coronavirus panic
kuwait sends 170 indians from deportation.

குவைத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ஒரு விமானம் இன்று (22.03.2020) இரவு 170 இந்திய பயணிகளுடன் இந்தியாவிற்கு புறப்படுவதாக அல்-ராய் தினசரி தெரிவித்துள்ளது.

உள்துறை அமைச்சகம், மனிதவளத்திற்கான பொது ஆணையம், வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய தூதரகம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

இதேபோன்று மற்ற நாட்டினரையும் வெளியேற்ற அந்தந்த நாடுகளின் தூதரகங்களின் ஒத்துழைப்புடன் உள்துறை அமைச்சகம் தற்போது செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.