குவைத்தில் இருவருக்கு புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்பு!

Kuwait reports COVID-19 variant
(PHOTO: AFP)

பிரிட்டனில் இருந்து திரும்பிய இரண்டு குவைத் பெண்களுக்கு புதியவகை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது.

பிரிட்டனில் இருந்து விமானத்தில் புறப்படுவதற்கு முன்னர் அந்த இரண்டு பெண்களுக்கும் PCR எனப்படும் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து குவைத் செல்லும் பயணிகள் கவனத்திற்கு..!

ஆனால், குவைத் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தபோது மேற்கொள்ளப்பட்ட மற்றொரு PCR சோதனையில் அவர்கள் புதியவகை கோவிட் -19 மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததாக அமைச்சின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் அப்துல்லா அல் சனத் கூறினார்.

அவர்கள் இருவரையும் தனிமைப்படுத்தலில் வைத்திருந்ததாகவும், மரபணு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் கூறிய அவர், பின்னர் அவர்கள் புதியவகை வைரஸ் மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது என்றும் கூறினார்.

முகக்கவசம் அணிவது, கைகளை சுத்தம் செய்வது, இடைவெளியை பின்பற்றுவது, மேலும் கூட்டங்களைத் தவிர்ப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

குவைத்தில் 20,000க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது!