குவைத்தில் முழு ஊரடங்கில் உள்ள Jleeb Al-Shoyoukh பகுதிக்கு KRCS உணவு பொட்டலங்கள் விநியோகம்..!!

kuwait red crescent distributes food in jleeb and mahboula isolated areas.

குவைத் ரெட் கிரசண்ட் சொசைட்டி (KRCS) முழு ஊரடங்கில் உள்ள Jleeb Al-Shoyoukh பகுதியில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு 1,000 உணவு பொட்டலங்களை விநியோகித்துள்ளது.

KRCS-ன் இயக்குநர் ஜெனரல் Abdulrahman Al-Oun அவர்கள் இன்று (22.04.2020) KUNA-விற்கு அளித்த அறிக்கையின்படி, Jleeb Al-Shoyoukh பகுதியின் சுற்றுப்புறத்தில் வசிக்கும் தொழிலாளர்களுக்கும், முழு ஊரடங்கில் உள்ள மற்றொரு பகுதியான Al- Mahboula பகுதிக்கும் கடந்த வாரம் 1,500 உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸுக்கு எதிரான தற்போதைய நடவடிக்கைகளை பின்பற்றியவாறு இந்த முயற்சியில் சமூகம் அந்த பகுதிகளுக்கு உணவு விநியோகித்ததாக தெரிவித்துள்ளது.