குவைத்தில் உள்ள இந்தியர்களை இலவசமாக தாயகம் அனுப்பிவைக்க தயார் – குவைத் அரசு உத்தரவாதம்

Indian ambassador to kuwait Jassem Al-Najem.

குவைத்தில் பல்வேறு காரணங்களால் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இலவசமாக இந்தியாவிற்கு அனுப்பிவைக்க தயார் என்று குவைத் அரசின் வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பான கடிதத்தை குவைத்திற்கான இந்திய தூதுவர் ஜாசீம்-அல்-நஜீம் அவர்கள் இந்திய வெளியுறவுத் துறையிடம் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்போது, வழங்கியுள்ள பொதுமன்னிப்பு பயன்படுத்தி தாயகம் திரும்புவதற்கு ஆவணங்கள் சரிசெய்து காத்திருக்கும்
இந்தியர்களுக்கு இலவசமாக உணவு மற்றும் தங்குவதற்கு இடமும் வழங்கியுள்ளது.

மேலும், அவர்கள் தாயகம் திரும்பும் நேரத்தில் இலவசமாக விமானப் பயணச்சீட்டு வழங்கபடும் என்று குவைத் அரசு முன்னரே அறிவித்துள்ளது மற்றும் இதன் மூலம் 12,000 இந்தியர்கள் வரையில் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தாயகம் திரும்புவதற்கு விருப்பம் உள்ள இந்தியர்களை குவைத் அரசின் செலவில் இலவசமாக அனுப்பிவைப்பதாக குவைத் உத்தரவாதம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அரசின் அனுமதி கிடைக்கும் பட்சத்தில், தற்போது குவைத் அரசு சார்பில் வெளிநாடுகளில் சிக்கியுள்ள குவைத் குடிமக்களை அழைத்து வரும் நடவடிக்கைகள் முடிந்ததும், இந்த மாதம் (மே) பாதியில் இந்த திட்டத்தை செயல்படுத்த குவைத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.