ஒவ்வொரு கத்தார் குடிமகனின் இதயத்திலும் ஒரு பெரிய இடத்தைப் பெற்றுள்ளார் – குவைத் அமீருக்கு கத்தார் பாராட்டு..!!

Qatar hails Kuwaiti efforts to defuse Gulf crisis
Qatar hails Kuwaiti efforts to defuse Gulf crisis. (Photo : TimesKuwait)

வளைகுடா பிரச்சனையை தீர்ப்பதற்கான குவைத் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் அல் சபா அவர்களின் முயற்சிகளுக்கு கத்தார் பாராட்டுகளை தெரிவித்துள்ளது

மேலும், குவைத் அமீர் அவர்கள் ஒவ்வொரு கத்தார் குடிமகனின் இதயத்திலும் ஒரு பெரிய இடத்தைப் பெற்றுள்ளார் என்று பாராட்டப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

2017ஆம் ஆண்டு முதல் வளைகுடா பிரச்சனையின் ஆரம்பத்தில் இருந்து தற்போது வரை வளைகுடாவில் ஒற்றுமையை மீட்டெடுப்பதற்கான இந்த முயற்சிகளில் அவரது அர்ப்பணிப்பு இன்று வரை தொடர்கிறது என்று கத்தாரின் வெளியுறவு மந்திரி முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானி அவர்கள் தெரிவித்துள்ளார்.

கத்தார் அரசாங்கமும் மக்களும் வளைகுடா நெருக்கடியைத் தீர்ப்பதற்கு பாராட்டு தெரிவித்தது மட்டுமல்லாமல், பிற நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கும், அதன் மனிதாபிமான பங்களிப்புகளுக்காகவும் குவைத்தின் முயற்சிகளைப் பாராட்டுவதாக கத்தார் அதிகாரி மேலும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

கடந்த வாரம், குவைத் வெளியுறவு மந்திரி அகமது நாசர் அல் சபா தோஹாவில் மூத்த அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் பரஸ்பர நலன்களை உள்ளடக்கியதாக கத்தார் ஊடகங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter