கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு குவைத் 40 மில்லியன் USD பங்களிப்பு..!!

Kuwait pledges USD 40 mln for fight against coronavirus at EU fundraiser event. (photo : Arab Times)

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான தடுப்பூசி மற்றும் பிற கருவிகளைப் பற்றிய ஆராய்ச்சிக்கு நிதியளிப்பதற்கான உலகளாவிய முயற்சிகளுக்கு குவைத் 40 மில்லியன் USD பங்களிப்பதாக திங்கள்கிழமை (மே 4) உறுதியளித்துள்ளது.

கொரோனா வைரஸின் பரவலைத் தடுக்கும் எதிர்கால சர்வதேச முயற்சிகளுக்கு 40 மில்லியன் USD பங்களிக்கவுள்ளதாக குவைத் வெளியுறவு மந்திரி ஷேக் Dr. Ahmad Nasser Al- Mohammad Al-Sabah அவர்கள் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் Ursula von der Leyen அவர்கள் நடத்திய ஆன்லைன் கொரோனா வைரஸ் குளோபல் ரெஸ்பான்ஸ் உறுதிமொழி நிகழ்வில் தெரிவித்தார்.

கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கான உலகளாவிய முயற்சிகளை ஆதரிப்பதற்காக குவைத் அளித்த நன்கொடை மொத்தம் 100 மில்லியன் USD ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற ஒரு முக்கியமான நிகழ்வை ஏற்பாடு செய்ததற்காக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் ஒத்துழைக்க குவைத் தயாராக இருப்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன் என்று அவர் தெரிவித்தார்.

source  : Arab Times