ஆகஸ்ட் 1 முதல் 197,000 பயணிகள் குவைத்திலிருந்து புறப்பட்டுள்னர்..!!

Kuwait passengers Departed
Photo Credit : IIK

குவைத் விமான நிலையம் கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் மீண்டும் செயல்படத் தொடங்கியதில் இருந்து அக்டோபர் 18ஆம் தேதி வரை 197,000 பயணிகள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு விமான நிறுவனங்களின் மூலமாக 1,965 விமானங்களில் சுமார் 135,000 பேர் வரையில் குவைத்திற்கு மீண்டும் வந்ததாக ஒரு அரபு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் காலாவதியான குடியிருப்புடன் உள்ளவர்களுக்கு ஒரு நாளைக்கு 2 KD அபராதம்..!!

சிவில் ஏவியேஷன் இயக்குநரகம் ஜெனரல் மன்சூர் அல் ஹாஷிமி அவர்கள் கூறுகையில், விமான நிலையத்தின் மொத்தம் இயக்கத்தின் சதவீத அளவில் நாட்டிலிருந்து புறப்பட்டு செல்லும் மற்றும் வந்து சேரும் அனைத்து விமானங்களின் செயல்பாடுகள் 30 சதவீதத்தை தாண்டவில்லை என்றார்.

குவைத்திற்குள் நுழைய தடைசெய்யப்பட்ட 34 நாடுகளில் உள்ளவர்கள் தடை விதிக்கப்படாத நாடுகளில் 14 நாட்களுக்கு தங்கிய பின்னரே குவைத் திரும்ப முடியும்.

மேலும், அவர்கள் கட்டாயமாக PCR சான்றிதழ் கொண்டுவர வேண்டும், குவைத் வந்தபின்னர் 14 நாட்கள் வீட்டு தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : குவைத்தில் தற்போது 95 சதவீதம் குடிமக்கள் அரசு வேளைகளில் உள்ளனர்..!!

குவைத் விமான நிலையத்திற்குள் நுழையம் அனைவரின் வெப்பநிலையையும் கண்காணிக்க அனைத்து விமான நிலைய வாயில்களிலும் உடல் வெப்பநிலை நுண்ணறிவு கேமராக்களை அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், கண்டிப்பாக முகக்கவசங்கள், கையுறைகள், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

இதையும் படிங்க : குவைத்தின் சபா அல்-அஹ்மத் பகுதியில் புதிதாக இரண்டு சுகாதார மையங்களை சுகாதார அமைச்சர் திறந்து வைத்தார்..!!

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

👉Facebook

👉 Twitter