குவைத்தில் சிவில் ஐடி பெறுவதற்கு முன்பதிவு செய்ய PACI ஆன்லைன் சேவை அறிமுகம்..!!

kuwait PACI launches online service for booking apppointment. (photo : TimesKuwait)

குவைத்தில் கொரோனா வைரஸ் நோய்தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகவே புதிய சிவில் ஐடி வழங்கபடும் பணிகளை சம்மந்தப்பட்ட துறை நிறுத்தி வைக்கப்பட்டுருந்தது.

இதையடுத்து, சிவில் ஐடி துறை வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், சனிக்கிழமை(ஜூலை 4) முதல் சம்மந்தப்பட்ட துறையின் அதிகாரபூர்வ தளத்தில் சிவில் ஐடி எடுப்பதற்கு சிவில் ஐடி அலுவலகத்திற்கு செல்வதற்கு முன் அனுமதி(Appointments) பெறுவதற்கு Online-யில் பதிவு செய்யவேண்டும் என்றும், வருகிற ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில், சிவில் ஐடி எடுப்பதற்காக அனுமதி பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட சிவில் ஐடி மையத்தில் அனுமதிக்கப்படுவர்கள் என்று அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் மூலம் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் சிவில் ஐடிகளை வழங்குவது ஒவ்வொரு நபரும் குறிப்பிட்ட நேரம் தேவை என்பதால் 1 மணி வரையில் அனுமதி பெற்று உள்ளே செல்லும் நபர்கள் நன்மையை கருதி மாலை 5 மணி சிவில் ஐடி வழங்கும் நேரம் நடைமுறையில் இருக்கும். ( அதாவது 1 மணிக்கு முன்னர் செல்லும் நபர்களுக்கு மட்டுமே இந்த 5 மணி என்கிற காலக்கெடு பொருந்தும்)

முன்பதிவு பெறுவதற்கான இணையதள முகவரி : www.paci.gov.kw

குவைத் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

Facebook : https://m.facebook.com/tamilmicsetkuwait/posts/?ref=bookmarks&mt_nav=0

Helo : https://m.helo-app.com/al/RpMeTUjbr

Twitter : https://twitter.com/kuwaittms?s=08